தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை மக்கள் மாளிகையில் இன்று (15.10.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கேரளாவின் முழுநேர ஆளுநராகவும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த அவரை முழு நேர ஆளுநராக நியமித்து அண்மையில் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் மக்கள் மாளிகையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி காவல் துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், அவருக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், நினைவுப் பரிசும் வழங்கினார். இதேபோல, மக்கள் மாளிகை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.